Monday, 17 October 2016

என்னவளே!



மணம் பொதிந்த மலர்கள் சூடியே
மங்கையின் கூந்தலும் மணக்குதென்பர்;
மனம் கெட்டோரடி பெண்ணே!
மணம் போன மலர்கள் மீண்டும்
மணம் பெறவே உன்னை நாடுவ தறிகிலார்

மங்கை முகம் பார்த்து மயங்கியே
மதியொத்த முகமுடையாள் என மெச்சுவர்;
மதி கெட்டோரடி பெண்ணே!
பளிங்கென மிளிரும் உன் முகங்கண்டு
கறை கொண்ட மதியே நாணுவ தறிகிலார்.

No comments:

Post a Comment