Wednesday, 1 June 2016

இரத்தம் சிந்தும் ஓவியம்

மாசிலா மதியொத்த
வெள்ளிப் பனிமலைகள் சூழ்ந்த,
தெளிந்த வானொத்த
நீல நீர்நிலைகள் தோய்ந்த,
கொஞ்சும் கிளியொத்த
பச்சை புல்வெளிகள் பரந்த,
பூவுலகின் சொர்கம்
என் கஷ்மீரில் - இன்று
வான் பொழிந்த தூரலாய்
தெறித்திட்ட தோட்டாகள்
மானுடரின் ஊன் துளைத்து,
சுட்டெரிக்கும் சூரியனொத்த
செங்குருதி படர்ந்ததுவே- எங்கும்
செம்மை நிறம் சூழ்ந்ததுவே;
இயற்கை அழகோவியம் ஒன்று
சோக பெருங்காவியம் ஆனதின்று;
பூங்கா வனமொன்றை
பாலை வனமாக்கும்
வன்முறை வெறியாட்டம்
இரத்த சரித்திரம் ஒன்று
படைத்திடவோ?
மதமும் மனிதம் கொன்று
தனிந்திடுமோ?!